Posts

தேஜாவு

தேஜாவு . அப்படி என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியும் என யூகிக்கிரேன். தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு  தேஜாவு என்பது பிரஞ்சு மொழியில் இதற்கு ஏற்கனவே நடந்தது என்பது அர்த்தம்.நாம் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் போது அது ஏற்கனவே நடந்தது போல் தோன்றும். இது இரண்டு வகை ஒன்று இடம் சார்ந்தது. மற்றொன்று நிகழ்வு சார்ந்தது. சமீபத்தில் இதே பெயர் கொண்ட படம் ஒன்றை OTT வழியாக கண்டேன். உடனடியாக படம் பார்க்கவில்லை, படத்தின் விளக்கவுரை மற்றும் முன்னோட்டத்தை பார்த்தேன். முன்னோட்டம் படத்தின் மீது ஆர்வத்தை தூண்டியது. ஆனால் படத்தை பார்க்கும் முன்னரே எனக்கும் தேஜாவு வந்துவிட்டது ஆம்,இதே போல் ஒரு கதை எங்கோ கேட்டது போலோ அல்லது படித்தது போலோ இருந்தது. அமைதியாக சிந்திக்க தொடங்கினேன்.அன்னை சரஸ்வதி காப்பாற்றினார். மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என் பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே   (சகலகலாவல்லி மாலை - குமரகுருபர சுவாமிகள் அருளியது) இது சரஸ்வதியின் சபதம் கதை போல் அல்லவா இருக்கிறது....

புத்தகம் வாசகனை தேர்ந்தெடுக்கின்றது

Image
புத்தகத்தை பற்றி எழுதி முடித்த பின்பு மறுபடியும் ஒரு மின்னூட்டல் புத்தகத்தை பற்றி (முந்தைய பதிவை காண    புத்தகம்    ) என்ன டைட்டிலை படித்தவுடன் சற்று சிந்திக்க தொடங்கிவிட்டிர்களா?? ஹ்ம்ம் சரி "வாசகன் புத்தகத்தை தேர்ந்தெடுப்பதில்லை புத்தகம்தான் தன் வாசகனை தேர்ந்தெடுக்கிறது " இந்த தொடரை எங்கு எப்போது படித்தேன் என தெரியவில்லை   ஆனால் மிகவும் ஆழ்ந்த பொருளுடைய தொடர். எனக்கு ஆரம்பத்தில் வாசிக்கும் பழக்கம்  இல்லை. ஆனால் வருடா வருடம் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு செல்லும் பழக்கம் இருந்தது. அந்த பழக்கமும் என் தந்தையின்  வாசிக்கும் பழக்கமும் என்னையும் வாசகனாக்கியது. அது முதல் புத்தகத்தின் மீது ஒரு தீரா பற்று மற்றும் நிறைய வாசிக்க வேண்டும் என்ற தாகமும் எனக்கு ஏற்பட்டது .எப்பொழுதும் போல் 2020 வருடமும் புத்தக திருவிழாவிற்கு சென்றிருந்தேன் ,படிக்க வேண்டும் என்று பட்டியலிட்டிருந்த புத்தகத்தை வாங்கினேன் பின்பு ஒரு புத்தகம் என் தந்தையால் பரிந்துரைக்கப்பட்டு வாங்கினேன் (ஒரு புத்தகம் வாசகனை தேர்ந்தெடுத்தது )அந்த புத்தகம் உ .வே சுவாமிநாத ஐயரின்(தமிழ் தாத்தா ) சுய சர...

சிறுகதை

Image
இரவு  சுமார் 9.30 மணி பிரபல எழுத்தாளர்  ஒருவரின் சிறுகதை தொகுப்பினை படித்துக்கொண்டிருந்தேன்,நான் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்னால் ஜன்னல் ,நன்றாக தென்றல் வீசிக்கொண்டிருந்தது,இரவின் அமைதியும் கதையினில் பயணமும் மிகவும் அழகாக இருந்தது. திடீரென்று ஒரு வெளிச்சம் வந்து சென்றது,பார்ப்பதற்கு ஒரு டார்ச் லைட் வெளிச்சம் போல் இருந்தது.அதன் பிறகு  சிறிது நேரத்திற்கு அது வரவில்லை,என்ன செய்துகொண்டிருந்தேன்,(பிரபல எழுத்தாளரின் சிறுகதை தொகுப்பு) மீண்டும் சிறுது நேரத்திற்கு பின் அதே டார்ச் லைட் வெளிச்சம் போன்ற ஒன்று தோன்றியது,அது தன் ஒளிக்கீற்று பல்வேறு திசைகளில் பாய்ந்து சென்றது, திடுக்கிட்டு வெளிச்சம் தோன்றியதற்கு எதிர்திசையை நோக்கினேன்(ஜன்னலை) யாரும் இல்லை எந்த ஒரு வெளிச்சமும் இல்லை,ஆனால் அந்த ஒளி வந்துகொண்டுதான் இருந்தது,ஒரு லேசான பயம்,உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்,சற்று நிதானித்து கொண்டு அறையை சுற்றிலும் பார்வையை செலுத்தினேன்,ஒளிக்கு உண்டான  காரணத்தை கண்டுபிடித்தேன்,மனம் அமைதி அடைந்தது. அந்த ஒளி எங்கள் வீட்டில் இருந்த ஒரு லேமினேட் செய்யப்பட புகைப்படத்தின் மேலே லைட் ...

ஸ்ரீ ராமஜயம்

                                                                                                                                                    श्रीः                           எழுத்தாய் சிரித்தாய் எழுதவைத்தாய் -பொருள்                         எடுத்தாய் கொடுத்தாய் பாடவைத்தாய் -உனைத்தாய் எனவே                         உணரவைத்தாய் என் உள்ளிருந்தே அறிவை வளரவைத்தாய்                   ...

புத்தகம்

வலைப்பூவில் என்னடா எழுதுவது என்று தினரிகொண்டிருந்த எனக்கு புத்தகத்தை பற்றி எழுதலாமே என்று புத்தகம் (புது(த்)அகம்) கூறியது அகத்தின் பொருள் என்னவென்று அகராதியை கேட்டதில் அகம் என்றால் உள்ளம், மனம் என்று கூறியது அகராதி, சரி புத்தகத்தை பற்றி எழுதலாம் என்று புத்தகம் கூறியது என்று எழுதிவிட்டு அது என்ன புது(த்)அகம் என்று அடைப்புகுறியில் போட்டிருக்கிறாயே என்ற உங்களின் கேள்விகளை புது அகம் மூலம் புரிந்துகொண்டேன். புது(த்)அகம் என்று நான் எழுதியதற்கு காரணம் புத்தகத்தை படித்ததனால் தோன்றிய புது அகம் அதாவது புத்துணர்வுபெற்ற என் அகம் (உள்ளம்) கூறியது.ஒரு ஆங்கில பொன்மொழி ஒன்று "the key thing about the book is you lose yourself in the authors world" என்று கூறுகிறது. என்னுடைய முதல் தமிழ் பதிவை புத்தகத்தை கொண்டும் புதுஅக த்தைக்கொண்டும் எழுதலாம் என்று என் பதிவை தொடங்குகிறேன் (அப்போ இதுவரைக்கும் intro தான் கொடுத்தியா ) புத்தகம் கல்வெட்டுகள் ,ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதி என்று தொடங்கி அச்சு இயந்திரம் மூலம் அச்சிடப்பட்ட இன்று நாம் வாசிக்கும் புத்தகமாகவும்,இன்னும் சற்று ஒரு படி மேலே ...