புத்தகம்
வலைப்பூவில் என்னடா எழுதுவது என்று தினரிகொண்டிருந்த எனக்கு புத்தகத்தை பற்றி எழுதலாமே என்று புத்தகம் (புது(த்)அகம்) கூறியது
அகத்தின் பொருள் என்னவென்று
அகராதியை கேட்டதில் அகம் என்றால் உள்ளம், மனம் என்று கூறியது அகராதி, சரி புத்தகத்தை பற்றி எழுதலாம் என்று புத்தகம் கூறியது என்று எழுதிவிட்டு அது என்ன புது(த்)அகம் என்று அடைப்புகுறியில் போட்டிருக்கிறாயே என்ற உங்களின் கேள்விகளை புது அகம் மூலம் புரிந்துகொண்டேன்.
புது(த்)அகம் என்று நான் எழுதியதற்கு காரணம் புத்தகத்தை படித்ததனால் தோன்றிய புது அகம் அதாவது புத்துணர்வுபெற்ற என் அகம் (உள்ளம்) கூறியது.ஒரு ஆங்கில பொன்மொழி ஒன்று "the key thing about the book is you lose yourself in the authors world" என்று கூறுகிறது.
என்னுடைய முதல் தமிழ் பதிவை புத்தகத்தை கொண்டும் புதுஅக த்தைக்கொண்டும் எழுதலாம் என்று என் பதிவை தொடங்குகிறேன்
(அப்போ இதுவரைக்கும் intro தான் கொடுத்தியா )

புத்தகம் கல்வெட்டுகள் ,ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதி என்று தொடங்கி அச்சு இயந்திரம் மூலம் அச்சிடப்பட்ட இன்று நாம் வாசிக்கும் புத்தகமாகவும்,இன்னும் சற்று ஒரு படி மேலே சென்று மின் புத்தகம் என்று சொல்கிற e books ஆகவும் audio books ஆகவும் பரிணமித்து உள்ளது.ஏன் நான் கூட பேணவும் மையயும் காகிதத்தயும் விட்டுவிட்டு வலைப்பூவில் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன்.
ஆனால் எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தை e books ஆகவோ audiobooks ஆகவோ படிப்பதைவிட,கேட்பதைவிட புத்தகம் நம் கையில் தவழ அதை வாசிப்பது போல் சுகம் வேறில்லை....
புத்தகம் பிடித்தவர்கள் (வாசிக்கும் பழக்கமுள்ளவர்கள் )அதையே விரும்புவர், வாசகர்களுக்கு புத்தகம் என்பது ஒரு குழந்தை போன்றது அதுவும் மழலை சொல் கூறும் குழந்தையல்ல,பல்வேறு ஞானங்களை கொண்ட ஞானகுழந்தையை போன்றது .எப்படி ஒரு குழந்தையை நாம் காணும்போதும் நாம் குழந்தையாக மாறுகிறோமோ அதைப்போன்றே புத்தகமும் அது தன்னுடைய உலகத்திற்கு அழைத்துசென்றுவிடுகின்றது .வாசகர்கள் குழந்தையின் கையை பிடிப்பது போல் ஒவ்வொரு பக்கத்தையும் மெதுவாக திருப்பி படிப்பர்.தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் நாம் ரசிக்க தவறவிட்ட நம்முன்னோர்கள் பலரும் ரசித்த வாசனைகளை பற்றி கூறினார்கள் அவை -மண்ணின் மனம் (மழை தூறி நின்ற பிறகு வருவது) நெய் காய்ச்சும் மனம் (அதாவது வீட்டில் உள்ள தயிரை கடைந்து வெண்ணைசேகரித்து பின் அதை உருகவைத்து....)என்று சொல்லிக்கொண்டே போனார்கள்.அவர்கள் ஒரு வாசனையை கூற மறந்து விட்டார்கள் அதாவது புத்தகத்தின் வாசனை
(அது எப்படி இருக்கும் என்று கேட்காதீர்கள் --சில விஷயங்கள் சொன்னால் புரியாது சுவைத்தால்(நுகர்ந்தால்) மறக்காது-
இது AVT காபி விளம்பர கோஷம்,இப்போ இங்கே என் கோஷம் காபிக்கு இல்ல புத்தகத்திற்கு)
புத்தகம் வடிவில் சிறியதாக இருந்தாலும் தனக்குள்ளே பெரிய உலகையே கொண்டுள்ளது.அந்த உலகத்திற்க்குள் பயணம் செய்யும் உரிமையை அதனை படிக்கும் வாசகர்களுக்கே கொடுத்துள்ளது.
எடுத்துக்காட்டாக பொன்னியின் செல்வன் போன்ற கதையை (மன்னிக்கவும் காப்பியம்) படிக்கும்போது படிப்பவர் திடிரென்று மாயாஜாலம் நிகழ்ந்ததுபோல் தஞ்சை,இலங்கை போன்ற ஊர்களுக்கு புத்தகத்தின் வழியே சென்று வருவார்கள். a key thing about a book is you lose yourself in the authors world.இந்த மாதிரி வாயு வேகம் ,மனோ வேகமாக பயணம் செய்ய வாசகர்களால் மட்டுமே முடியும்,அப்படி பயணம் செய்யதுவிக்க புத்தகத்தாலும்,எழுத்தாளர்களால் முடியும்
(அது ஏன் எடுத்துக்காட்டுக்கு வேற ஏதாவது புத்தகத்தின் பெயரை குறிப்பிடலாமே ?
இதற்கு பொன்னியின் செல்வன் படித்த நபரின் பதில் --ஒரு சூரியன் ,ஒரு சந்திரன் ,ஒரு பொன்னியின் செல்வன்,ஒரு கல்கி)
புத்தகம் வாசிப்பவர்களுக்கு உள்ள பல பழக்கவழக்கங்களுள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்
புத்தகத்தின் பக்கத்தை மடித்து கொண்டு படிப்பது பிடிக்காது

புத்தகத்தின் நடுவே பென்சில் போன்ற எழுதுகோள்களை வைத்து அதை மூடிவைப்பது பிடிக்காது(என்று பட்டியல் நீண்டு கொண்டேபோகும்)
ஏனெனில் புத்தகத்திற்கு வலிக்கும்,அது எப்படி வலிக்கும் என்பது புத்தகம் படிப்பவருக்கே புரியும்
புத்தகம் ஒரு உற்ற நண்பன் ஒரு ஆலோசகர் ,ஒரு தீர்க்கதரிசி ஏன் பலருக்கும் ஞானகுருவாகவும் விளங்குகின்றது.இப்படி புத்தகத்தை பற்றி இடைவிடாமல் சொல்லி கொண்டே போகலாம்.......ஒவ்வொரு புத்தகத்தை படிக்கும் போதும் வாசகன் அதன் ஆசிரியரிடமும் கதையில் வரும் கதாபாத்திரத்துடனும் வாழ்கிறான்
சுவாசிப்பதால் வாழ்கிறோம்
வாசிப்பதால் வளர்கிறோம்
புத்தகம் படியுங்கள்

Comments
Post a Comment
we invite your valuable comments