கண்டனம்
வணக்கம்.,நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பதிவு தெளிவுரை:"இது கண்டன பதிவு அல்ல" அமைதி கொள்க வாழ்வில் நாம் இலக்கை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு பொழுதும் நாம் விமர்சனங்களையும்.,கண்டனங்களையும் சந்திக்க நேரிடும்., உலகில் உள்ள அனைவரையும் திருப்தி படுத்த முடியாது.,மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய சாதனையாளர்கள் சந்திக்காத சோதனையா,விமர்சனங்களா!.,கண்டனங்களா!.. சரி இப்படி நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொள்ளலாம் மனம் குழந்தை போன்றது சமாதான படுத்துவது எளியதன்று ஆனால் வலிமையானது.. எனக்கு மிகவும் பிடித்த உ வே சாமிநாத ஐயர் வாழ்வில் நடந்த நிகழ்வு சீவக சிந்தாமணி நூல் வெளியாகிப் பலரது அன்புக்கு உரியதாயிற்று.. ஒரு பக்கம் அபிமானிகளுடைய அபிமானிகளுடைய ஆதரவு,மறுப்பக்கம் சிலரின் விஷமச்செயல்கள் தலைதூக்க தொடங்கின.... அவர்களின் நோக்கம் பிழைத்திருத்தம் அன்று.,கண்டனம் தெரிவித்து தங்களை பிரபல படுத்தவும்,மற்றவரின் உழைப்பை துச்சம் செய்வதுதான். நியாயமான பிழையை திருத்திக்கொண்டார் தமிழ் தாத்தா.,ஆனால் மற்றோருபக்கம் விஷமிகளின் செயல் தொடர்ந்தது சில பத்திரிகைகளும் அவரின் உழைப்பை இகழ்ந்து செய்தியை வெளியிட்டது., தமிழ் தா...