புத்தகம் வாசகனை தேர்ந்தெடுக்கின்றது
புத்தகத்தை பற்றி எழுதி முடித்த பின்பு மறுபடியும் ஒரு மின்னூட்டல் புத்தகத்தை பற்றி (முந்தைய பதிவை காண புத்தகம் )
என்ன டைட்டிலை படித்தவுடன் சற்று சிந்திக்க தொடங்கிவிட்டிர்களா?? ஹ்ம்ம் சரி
"வாசகன் புத்தகத்தை தேர்ந்தெடுப்பதில்லை புத்தகம்தான் தன் வாசகனை தேர்ந்தெடுக்கிறது " இந்த தொடரை எங்கு எப்போது படித்தேன் என தெரியவில்லை ஆனால் மிகவும் ஆழ்ந்த பொருளுடைய தொடர். எனக்கு ஆரம்பத்தில் வாசிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் வருடா வருடம் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு செல்லும் பழக்கம் இருந்தது. அந்த பழக்கமும் என் தந்தையின் வாசிக்கும் பழக்கமும் என்னையும் வாசகனாக்கியது. அது முதல் புத்தகத்தின் மீது ஒரு தீரா பற்று மற்றும் நிறைய வாசிக்க வேண்டும் என்ற தாகமும் எனக்கு ஏற்பட்டது .எப்பொழுதும் போல் 2020 வருடமும் புத்தக திருவிழாவிற்கு சென்றிருந்தேன் ,படிக்க வேண்டும் என்று பட்டியலிட்டிருந்த புத்தகத்தை வாங்கினேன் பின்பு ஒரு புத்தகம் என் தந்தையால் பரிந்துரைக்கப்பட்டு வாங்கினேன் (ஒரு புத்தகம் வாசகனை தேர்ந்தெடுத்தது )அந்த புத்தகம் உ .வே சுவாமிநாத ஐயரின்(தமிழ் தாத்தா ) சுய சரிதை -என் சரித்திரம் என்ற புத்தகம். இதை புத்தகம் என்று சொல்வதை விட பொக்கிஷம் என்று சொன்னால் மிகையாகாது .தமிழ் நூல்களை சேகரிக்க இம்மாபெரும் மனிதர் பட்டபாடுதான் என்ன! வாசிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு புதிய அனுபவம் ஒரு ஆச்சரியம் ஒரு சரித்திரம் என பல்வேறு சிறப்பினை உடையது.இந்த புத்தகத்தை வாங்கும் எண்ணமில்லை ( இப்படி பட்ட ஒரு புத்தகம் உள்ளது என்பதை நான் அறியேன் )புத்தகத்திருவிழாவிற்கு சென்ற பொழுது ஒவ்வொரு பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர் அரங்கிலும் உள்ள புத்தகங்களை ரசித்துக்கொண்டும் சிலவற்றை வாங்கியும் சென்றுகொண்டிருந்த பொது டாக்டர் உ வே சாமிநாத ஐயர் நூல் நிலையத்திற்கு சென்றேன் புத்தகங்களை ரசித்துக்கொண்டிருந்த பொது என் சரித்திரம் நூல் என் கண்ணில் பட்டது (அப்புத்தகம் தன்னை காட்டிக்கொண்டது )
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரலிது காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது
என்ற திரையிசை பாடல் வரிகளுக்கேற்ப புத்தகம் இருக்கும் இடங்களுக்கு சென்றாலே பல குரல்கள் காதருகினில் ஒலித்துக்கொண்டே இருக்கும் -அது புத்தகத்தின் குரல்
அப்படியாக என் சரித்திரம் மற்றும் உ வே சா அவர்கள் எழுதிய மற்றொரு புத்தகமான நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் என்ற புத்தகம் வாங்கினேன்,அது மட்டும் அல்லாமல் இவ்வாண்டு நிகழ்ந்த புத்தக திருவிழாவிலும் உ வே சா அவர்கள் எழுதிய மற்றோரு புத்தகமான நல்லுரை கோவை என்னும் புத்தகத்தினையும் வாங்கி அப்புத்தகம் பேசிக்கொண்டிருக்கிறது (நான் தூங்கும்போதும்).பல சுவையான தகவல்களும் வரலாறுகளும் தன்னகத்தே கொண்டுள்ளது.நாம் அனைவரும் படித்து போற்றி பாதுக்காக்கபட வேண்டிய புத்தகம்.
இப்படியாக புத்தகத்தை பற்றி சொல்லிக்கொண்டேபோகலாம்.ஒரு புத்தகத்தை படித்து முடித்தவுடன் அடுத்த புத்தகத்தை தேடி மனம் பயணிக்கிறது
பாதிவரை கேட்கும் கதை முடியாதெனில் மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்
அலைவார் அவர்தானே அடைவார் அவர் அடையும் புதையல் பெரிது
வாசிப்பதை சுவாசிப்பதுபோல் தொடர்வோம்
Comments
Post a Comment
we invite your valuable comments