அன்பே சிவம்- பகுதி-1

அன்பே சிவம் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்" என்று சேக்கிழார் பெருமானுக்கு அடியெடுத்துக்கொடுத்த,தாயிற் சிறந்த தயவான தத்துவனைப் (ரை) பற்றிய,அடியேனின் சிறு த்தொடர்ப் பதிவு அன்பே சிவம், அன்புதான் சிவம் சிவம் தான் அன்பு. ஒரு மகாசிவராத்திரி திருநாள்,நான் பிறந்த கிராமத்து கோவிலுக்கு சென்றேன். எம்பெருமான் சிவபெருமானுக்கு அபிஷேகமும் ஆராதனையும் மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.(தனக்கான பூஜையை அவர் சிறப்பாக நடத்திக்கொண்டார் என்று தான் கூற வேண்டும்) "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்ற மாணிக்கவாசகரின் வாசகமும் அதுவன்றோ! என் ஊருக்கு செல்வோம் குறிப்பாக நடராஜர் சந்நிதிக்கு குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே (திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்) தில்லை ஆனந்த கூத்தனை (ஸ்ரீ நடராஜ மூர்த்தியை) பார்த்தாலோ ,அவரை ந...