வானொலி பகுதி-1


அதிகாலை 5:00 மணிக்கு வீரனின் காதில் ஒரு இசை ஒலித்தது "கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே".

வீரன் விழித்து கொண்டான்,பாடல் அரை மணி நேரத்தில் நிறைவுற்றது,பிறகு அதிகாலையை மேம்படுத்த பல உன்னத கருத்துக்களை ஜெயராமன் என்ற அறிமுகம் இல்லாத நண்பர் கூறுவார்.

ஜெயராமனின் குரல் சிலருக்கு மட்டும்தான் தெரியும்.

மாவீரன் படத்தில் வருவது போல் எனக்கு மட்டும் கேட்கும் குரல் அல்ல,என்னை போல் வானொலி கேட்கும் பலருக்கும் ஒலிக்கும் குரல்.

வானொலி- அறிவியலின் ஒரு மிக சிறந்த படைப்பு.


என்னதான் அலைபேசி இருந்தாலும் வானொலிக்கு தனி சிறப்பு உண்டு.

தாத்தா பாட்டிகளுக்கு பிடித்த பொருட்களின் பட்டியலில் இருக்கும் பொருள் வானொலி.

சரி எதற்கு இந்த பதிவு?

2023-ஆம் வருடம் மேற்படிப்பிற்காகவும் அலுவல் நிமித்தமாகவும் சென்னை வாசியானேன்

வேலை நேரம் போக பிற நேரங்களில் அறையில் தனிமையில் இருக்க வேண்டும்.

எனக்கு உறுதுணையாக இருந்தது எனது புத்தகங்களும்,எனது பணியும்.

மூன்றாவதாக ஒருவன் வந்தான் "வானொலி".(அறையில் தொலைக்காட்சியை வேண்டுமென்றே வேண்டாமென்று முடிவெடுத்ததன் விளைவு)

"என் இனிய தனிமையே" என்ற பாடலை ரசித்து கேட்க துவங்கினேன்

பள்ளியில் பயிலும்போது எனது பாட்டியும் அம்மாவும்,அதிகாலை 5:00 மணிக்கு,என்னை எழுப்பும்போது அவர்கள் குரலுடன் எனது நாளை தேவகானத்துடன் துவக்கிய முக்கிய nanban- "வானொலி"

வீட்டில் கடிகாரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை

வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் ஒலித்தல்- 5:00மணி-5:30மணிக்குள் இருக்கும்
கந்தசஷ்டி கவசம் - 6.00மணி - 6:30மணிக்குள் இருக்கும்

6:30மணி முதல் 7:00 மணிக்குள் அது வாரத்தின் எந்த நாள் என்று நாம் அறிந்துகொள்ளலாம் 

திங்கள் - சிவபெருமான் பக்தி பாடல்
செவ்வாய் - அம்மன்/முருகன் பாடல்

என்று அந்த நாளின் தெய்வத்தின் பாடல்கள் ஒலிக்கும்
(மற்ற நாட்கள் சிறப்பறிய வானொலி கேளுங்கள்)

திரையிசை பாடல் ஒலிக்க துவங்கினால் மணி 7:00 என்று அர்த்தம்

106.4 பண்பலையில் திரு.ஜெயராமன் என்பவர் தொகுத்து வழங்குவார்.நேயர்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் கஷ்டங்களை எழுதி அனுப்புவர் அதற்காக பிரார்த்தனை செய்ய வைப்பார்.

"லோகா சமஸ்தா சுக்கினோ பவந்து"

"உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்"

என்ற எண்ணத்துடன் அந்த நாள் தொடங்கும்.

வானொலி பற்றிய இந்த பகுதியும் தான்


ராமகிருஷ்ணன் பா



பகுதி - 2 (05- 10-2025) 


Comments