வானொலி பகுதி-2

டிசம்பர் மாதம் (மார்கழி) சென்னை மைலாப்பூரில் பல்வேறு சிறப்பு பெற்ற சங்கீத கச்சேரிகள்  நடக்கும்,எவ்வாறு சிறப்பு என்றல் மாதத்தில் முதல் பாதி வருண பகவானின் கச்சேரி (இடி,மின்னல்,புயல்,மழை),அதுவும் ஒரு வகை இசைதான்.

சென்னையில் மழை என்றல் தொலைக்காட்சி செய்திகள்,அது ஒரு பயங்கரமான நிகழ்வு என்பதை நம் மனதில் பதிய செய்துவிடுவர்.அவர்கள் கூறும் அறிவுரைகளில் சில 

1.அத்தியாவசிய பொருட்களை வாங்கிவைத்துக்கொள்வது 
2.மெழுகுவர்த்தி,கைவிளக்கு (டார்ச்)
3.வானொலி
.............................................




இன்னும் சொல்லிக்கொண்டே போவார்கள்.

அப்படி ஒரு மழை காலத்தில் அலுவலகம் விடுமுறை அறிவிக்கப்பட்டது,மின்சாரம் துண்டிக்கப்பட்டது,அலைபேசியை யாராவது அழைத்தால்  அல்லது அழைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டிய கட்டாயம்.

எனது வானொலியை முழுவதும் சார்ஜ் செய்துவிட்டுப்  பாடலை கேட்கத்  துவங்கினேன்.மழையை பற்றிய முக்கிய செய்திகள் தவிர முழுவதும் பாடல்தான்.

       "வெளியே மழைப்  பொழிந்தது வீட்டில் இசை மழையில் நனைத்தேன்"

அப்பொழுது ஒரு பாடல் வரி 

"மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்பு கொடி காட்டியாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பி கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்
கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்"

நெடுஞ்சாலையிலே நனைவோம் என்றால் "வெள்ளம்",வெள்ள நீர் வடிந்த பிறகு மழையில் ஆனந்தமாக நனைந்தேன்.யார் யாருக்கு மழையில் நனைவது பிடிக்கும் என்று தெரியாது ஆனால் நான் மழையில் நனைந்தது சளிக்கு (ஜலதோஷம்) பிடித்துவிட்டது (எனக்கு சளி பிடிக்கவில்லை,சிலநேரங்களில் அதற்க்குத்தான்  என்னை பிடித்து விடும்)


வானொலி அளித்த கருத்து ஊசி :வெள்ளம் வராமல் தடுக்க மரம் வளர்ப்போம்!,நீர்நிலை காப்போம்! மண்வளம் காப்போம்!

மழையில் நனைய,மழையை ரசிக்க செய்தது வானொலி.

மழையின் வகைகளை பற்றி தெரிந்துகொண்டேன்

தமிழ் மொழி மழையை பல வகையாகத் தொகுத்திருக்கிறது,அதில் சில 
 
"அடைமழை,சாரல்,தூறல்,ஆவி,சோணை,பெயல்,புயல்,கனமழை,ஆலங்கட்டி,ஆழிமழை,துளிமழை,வருள்மழை"

ஒவ்வொரு வகையும் அதன் தன்மையை அறிந்து பெயர் சூட்டியுள்ளனர்(அதை தனியாக ஒரு பதிவில் பார்ப்போம்)

ஒரு வழியாக மழை குறைந்து ஒரு நாள்  அலுவலகம் புறப்பட்டேன் அன்று வெள்ளிக்கிழமை ஹலோ FM 106.4 பண்பலையில் பழைய பாடல்களை போடுவார்.அப்போது ஒரு சந்தர்ப்ப பாடல் 

"செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர் பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்"


வானொலி மூலம் வானில் இருந்து வந்த ஒலிக்கு நன்றி கூறி அலுவலகம் புறப்பட்டேன்.
 

அலுவலகம் சென்றுவந்து பதிவை தொடர்கிறேன்.


ராமகிருஷ்ணன் பா 
06-10-2025 

 

Comments