ஆதிகேசவரும் நாதஸ்வரமும்
உ
மயூரவல்லி தாயாரையும்,ஹனுமாரையும் வழிபட்டு,ஆதிகேசவரை தரிசிக்க காத்துக்கொண்டிருந்தோம்
சாயரட்சை பூஜை நடந்து கொண்டிருந்தது,ஆதிகேசவ பெருமாளின் தரிசனம் பெற சற்று காத்திருக்க வேண்டும்.🎝திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்🎝 என்று சிறு குழந்தை பாடிக்கொண்டிருந்தாள்.
(வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து)
என்னப்பா ராமகிருஷ்ணா!,ஆதி கேசவரை தரிசிக்க வந்தாயா?
அடடே விருபாக்ஷர் (நம் விருபாக்ஷர்),குசலம் விசாரித்து,நாங்கள் மூவரும் தரிசிக்க காத்துக்கொண்டிருந்தோம்.
சன்னதி வாயிலில் "சர்வ தேவ நமஸ்கார ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி" என்று எழுதியிருந்தது.
விருபாக்ஷர் இதன் பொருளை எடுத்துரைத்தார்,நாம் வேவ்வேறு இறைவனுக்கு செய்யும் வழிபாடு அத்தனையும் கேசவனையே சென்றடைகிறது என்று சொன்னார்.(வானிலிருந்து பொழியும் மழையானது வேவ்வேறு நீர்நிலைகளில் சென்று இறுதியில் கடலை சென்றடைகிறது)
அற்புதம் என்று ரசிக்க,திரை விலகி ஆதிகேசவரின் தரிசனம் கிடைத்தது.
(அறியாமை மறைந்து ஞானமான இறைவனின் தரிசனம் கிடைத்தது)
பல்லாண்டு பல்லாணடு பல்லாயிரத் தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா !உன்
சேவடி செவ்வி திருக்காப்பு
அருளாசியுடன்,கோவிலில் வலம் வரும் வேலையில்,ஒரு நாதஸ்வர வித்வான்,நாதஸ்வரம் இசைக்க தொடங்கினார்.அருமையான இசை.இசையுடன் விருபாக்ஷரும்,என்னையும் என் நண்பரையும் நாதஸ்வர வித்வான் இசைக்கும் மணடபத்தின் அருகில் அழைத்து சென்றார்.
கோவிலில் அத்துணை பெயர்களில் நாங்கள் மூவர் மட்டுமே நாதஸ்வர இசையை பார்த்து ரசித்து கொண்டிருந்தோம்.இறைவனுக்காக அவரை மகிழ்விக்க நாதஸ்வரம் வாசிக்கும் அவரின் நாதஸ்வர இசை,நாங்கள் மூவரும் ரசிக்கிறோம் என்று தெரிந்ததும் அவர் கண்ணில் எண்ணற்ற ஆனந்தம் பரிகாசித்தது ,இசையின் அழகு மேலும் கூடிற்று.
விருபாக்ஷர் என்னை நோக்கி "வாழ்வில் விரைவாக பல விஷயங்களை நோக்கியும் ,பல காரணங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம்,அழகான விஷயங்களை ஆராதிக்க தவறவிடுகிறோம்.திருமண விழாக்களில் திரை இசை பாட்டும் நடனமும் கூடிவிட்டது நாதஸ்வரத்தை ரசிக்கிறோமா?
நாதஸ்வரத்தை மங்கள வாத்தியம் என்பர்.
அந்த வித்வானின்,கண்களும் இசையும் நாம் ரசிக்கிறோம் என்று தெரிந்ததும் எவ்வளவு உற்ச்சாகத்துடனும் அழகாகவும் இருந்தது.
சிறு சிறு விஷயங்களை ரசித்து உற்சாக படுத்துவோம்,அது உனக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என்றார்.
எத்தனை நாள் நிலவை ரசித்திருக்கிறாய்,ரசித்துப்பார் அழகாய் தெரியும்.
🎝வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை !🎝 என்று பாடிக்கொண்டே விருபாக்ஷர் விடை பெற்றுக்கொண்டார்.
நம்மை சுற்றி உள்ள அழகை ரசித்து வாழவேண்டும்,வாழ்க்கையை ரசித்து வாழவேண்டும்,பிறர் ரசிக்கும் படி வாழ வேண்டும் என்று போதித்து விட்டு சென்றார்.
நீங்கள் ரசிக்கும்,ரசித்த விஷயங்களை பற்றி எனக்கு பின்னூட்டமிடுங்கள்,காத்திருக்கிறோம் அதையும் ரசிப்பதற்கு.
🙏
-விருபாக்ஷருடன் ராமகிருஷ்ணன்
விசுவாவசு வருடம்
கார்த்திகை திங்கள்-14-ம் நாள்
30-11-2025
Comments
Post a Comment
we invite your valuable comments