கண்டனம்
வணக்கம்.,நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பதிவு

தெளிவுரை:"இது கண்டன பதிவு அல்ல"
அமைதி கொள்க
வாழ்வில் நாம் இலக்கை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு பொழுதும் நாம் விமர்சனங்களையும்.,கண்டனங்களையும் சந்திக்க நேரிடும்.,
உலகில் உள்ள அனைவரையும் திருப்தி படுத்த முடியாது.,மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய சாதனையாளர்கள் சந்திக்காத சோதனையா,விமர்சனங்களா!.,கண்டனங்களா!..
சரி இப்படி நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொள்ளலாம்
மனம் குழந்தை போன்றது சமாதான படுத்துவது எளியதன்று ஆனால் வலிமையானது..
எனக்கு மிகவும் பிடித்த உ வே சாமிநாத ஐயர் வாழ்வில் நடந்த நிகழ்வு
சீவக சிந்தாமணி நூல் வெளியாகிப் பலரது அன்புக்கு உரியதாயிற்று..
ஒரு பக்கம் அபிமானிகளுடைய அபிமானிகளுடைய ஆதரவு,மறுப்பக்கம் சிலரின் விஷமச்செயல்கள் தலைதூக்க தொடங்கின....
அவர்களின் நோக்கம் பிழைத்திருத்தம் அன்று.,கண்டனம் தெரிவித்து தங்களை பிரபல படுத்தவும்,மற்றவரின் உழைப்பை துச்சம் செய்வதுதான்.
நியாயமான பிழையை திருத்திக்கொண்டார் தமிழ் தாத்தா.,ஆனால் மற்றோருபக்கம் விஷமிகளின் செயல் தொடர்ந்தது
சில பத்திரிகைகளும் அவரின் உழைப்பை இகழ்ந்து செய்தியை வெளியிட்டது.,
தமிழ் தாத்தா பதில் எழுதாமல் மௌனம் காத்தார்.,பொறாமைக்காரர்களின் செயல் நின்றபாடில்லை .,மிக வலுவாக தொடர்ந்தது
ஒரு நாள் கண்டனத்திற்கு சமாதானம் எழுதுவதுதான் சரி என்று எழுதினார்
அது ஒரு இரவு பொழுது.,காலை விடிந்ததும் சமாதான பத்திரிக்கையை (பதில்)
எடுத்துக்கொண்டு சாது சேஷையர் என்ற பேரன்பு மிக்க நபரிடம் காண்பித்து யோசனை கேட்கலாம் என்று அவரை அணுகினார்
---------------------------------------------------------------------------------------------------------------------------
கதை பின்வருமாறு:
சாது சேஷையர் உபதேசம்
(என் சரித்திரம் நூலில் இருந்து)
நான் எழுதிக் கொண்டு சென்ற கடிதங்களை அவர் கையிற் கொடுத்து,
"சிந்தாமணியைப் பற்றிய கண்டனங்கள் எங்கும் உலாவி வருவது உங்களுக்கு தெரியுமே.தூஷணைகளுக்குச் சமாதானம் சொல்லுவது சாத்தியமன்று.பிழையொன்று சொல்லப்பட்டவற்றிற்கு எனக்குத் தெரிந்த அளவில் சமாதானம் எழுதியிருக்கிறேன்.பார்வையிடவேண்டும்"என்றேன்.
அவர் வாங்கிப் பார்த்தார்.அவர் என்ன சொல்லப்போகிறாரோ வென்று நான் ஆவலோடு எதிர்ப்பார்த்து நின்றேன்".
அவர் உடனே அதை அப்படியே கிழித்துப் பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் போட்டார்.எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.கலக்கமுற்றேன்.அவர் என்னைப்பார்த்து மிகவும் நயமான குரலில் சொல்லத் தொடங்கினார்:"நான் கிழித்து விட்டதைப்பற்றி வருத்தப்படவேண்டாம்.நீங்கள் சமாதானம் எழுதுவதென்ற வேலையையே வைத்துக்கொள்ளக்கூடாது .சிலர் உங்களை தூஷித்துக்கொண்டு திருவதும் கண்டனங்கள் வெளிப்படுத்தியிருப்பதும் எங்களுக்கு தெரிந்தனவே.அப்படி செய்கிறவர்கள் இன்னாரென்பதை நான் நன்றாக அறிவேன்.அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ மாணாக்கர்களுக்கோ மற்ற அன்பர்களுக்கோ உங்களிடம் மன வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா?இம்மியளவுகூட இல்லை என்பது நிச்சயம்.அப்படி இருக்க,இந்த விஷயங்களை பற்றிச் சிந்துத்து நீங்கள் கவலைப்படுவது அனாவசியம்.இதற்க்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களுடைய எதிரியின் பேர் பிரகாசப்படும்.உங்கள் பதிலுக்கு மறுப்பு அவர்கள் எழுதுவார்கள்;நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுத நேரும். இப்படியே உங்கள் காலமெல்லாம் வீணாகி விடும்.நல்ல காரியத்திற்கு நானூறு விக்கினங்கள் வருவது உலக வழக்கம்.சீமையிலும் இப்படியே வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு.அவற்றைத் தக்கவர்கள் மதிப்பதில்லை.உங்கள் அமைதியான நேரத்தை இந்தக் காரியத்திலே போக்க வேண்டாம்.இம்மாதிரி யாரேனும் தூஷித்தால் பதிலெழுதுகிறதில்லை யென்று வாக்குறுதி அளியுங்கள்" என்று கூறினார்.
முதலில் கண்டனத்துக்குச் சமாதானம் எழுதாமல் இருந்த நான் மிக்க யோசனை செய்தே அதனை எழுதினேன்.தீர்மானத்தோடு செய்த காரியம் வீணாவதென்றால் சிறிது மனத் தளர்ச்சி ஏற்படுவது இயல்புதானே? 'சிறிதும் யோசியாமல் கிழித்துவிட்டாரே' என்று எண்ணினேன்.
"என்ன யோசிக்கிறீர்கள்?நீங்கள் இன்னும் பல காரியங்களைச் செய்யவேண்டும்.அதற்க்கு இவ்விஷயங்களெல்லாம் தடைகளாக இருக்கும்.இக்கண்டனம் இன்றைக்கு நிற்கும்:நாளைக்கு போய்விடும்.உங்களை எதிர்ப்பவர்கள் மனம் திருந்தி உங்கள்பால் அன்பு பூணும் காலமும் வரும்.அவர்கள் தங்கள் செயலை நினைத்து தாமே வருந்தினாலும் வருந்துவர்:ஆதலால் இந்தக் கண்டனப் போரில் நீங்கள் இறங்க வேண்டாம்.நீங்கள் உங்கள் தமிழ்த் தொண்டைச் செய்து கொண்டேயிருங்கள்.தெய்வம் உங்களை பாதுகாக்கும்"என்று அவர் மீட்டும் வற்புறுத்திச் சொன்னார்.
இந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலை அளித்தன."நான் இனித் தூஷணைகளைக் கவனிப்பதும் இல்லை.அவற்றிக்குச் சமாதானம் எழுதப் புகுவதும் இல்லை"என்ற உறுதி மொழியை அன்று அவரிடம் சொன்னேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவை எழுதிக்கொண்டிருந்த பொழுது.,நானும் விருபாக்ஷரை அழைத்தேன் அவரிடம் வரைவு (DRAFT) பதிவை அனுப்பினேன்.,
ராமகிருஷ்ணா இந்த கதையின் மூலம் நீ அறிந்தது மற்றும் வாசகர்களுக்கு கூற வருவது என்ன? என்று கேட்டார்
1)முறையற்ற கண்டனங்களுக்கு மற்றும் விமர்சனங்களுக்கு செவி மடுக்காமல்.,நாம் நம் பணிகளை திறம்பட செய்வதில் கவனம் செலுத்தவேண்டும்.,என்றேன்...
இதையும் சேர்த்துக்கொள்....என்றார்
2)உணர்ச்சிவசத்தில்/குழப்பத்தில் முடிவு எடுக்காமல் பெரியோரின் துணை நாடுவது
3)முழு தகவலையும் அறியாமல் பிறரை விமர்சிப்பதை தவிர்ப்பது.
அன்பை பகிர்வோம்...
விருபாக்ஷருடன் ராமகிருஷ்ணன்
பராபவ வருடம் சித்திரை திங்கள் 31-ம் நாள்
மே-14-2026
(பின் குறிப்பு: பதிவிற்காக கதையை சுருக்கியுள்ளேன்.,முழு கதையையும் "என் சரித்திரம்" என்ற உ வே சா அவர்களின் சுய சரிதையை படியுங்கள்...நன்றி )
Comments
Post a Comment
we invite your valuable comments