புத்தகம் வாசகனை தேர்ந்தெடுக்கின்றது

புத்தகத்தை பற்றி எழுதி முடித்த பின்பு மறுபடியும் ஒரு மின்னூட்டல் புத்தகத்தை பற்றி (முந்தைய பதிவை காண புத்தகம் ) என்ன டைட்டிலை படித்தவுடன் சற்று சிந்திக்க தொடங்கிவிட்டிர்களா?? ஹ்ம்ம் சரி "வாசகன் புத்தகத்தை தேர்ந்தெடுப்பதில்லை புத்தகம்தான் தன் வாசகனை தேர்ந்தெடுக்கிறது " இந்த தொடரை எங்கு எப்போது படித்தேன் என தெரியவில்லை ஆனால் மிகவும் ஆழ்ந்த பொருளுடைய தொடர். எனக்கு ஆரம்பத்தில் வாசிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் வருடா வருடம் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு செல்லும் பழக்கம் இருந்தது. அந்த பழக்கமும் என் தந்தையின் வாசிக்கும் பழக்கமும் என்னையும் வாசகனாக்கியது. அது முதல் புத்தகத்தின் மீது ஒரு தீரா பற்று மற்றும் நிறைய வாசிக்க வேண்டும் என்ற தாகமும் எனக்கு ஏற்பட்டது .எப்பொழுதும் போல் 2020 வருடமும் புத்தக திருவிழாவிற்கு சென்றிருந்தேன் ,படிக்க வேண்டும் என்று பட்டியலிட்டிருந்த புத்தகத்தை வாங்கினேன் பின்பு ஒரு புத்தகம் என் தந்தையால் பரிந்துரைக்கப்பட்டு வாங்கினேன் (ஒரு புத்தகம் வாசகனை தேர்ந்தெடுத்தது )அந்த புத்தகம் உ .வே சுவாமிநாத ஐயரின்(தமிழ் தாத்தா ) சுய சர...