Posts

Showing posts from November, 2025

ஆதிகேசவரும் நாதஸ்வரமும்

உ ஒ ரு நாள் சனிக்கிழமை,ஏகாதசி விரத நன்னாள்,மாலை ஆதிகேசவ பெருமாளை சேவிப்போம் என்று கிளம்பினேன்,என் நண்பரும் இனைந்து கொண்டார். மயூரவல்லி தாயாரையும்,ஹனுமாரையும் வழிபட்டு,ஆதிகேசவரை தரிசிக்க காத்துக்கொண்டிருந்தோம் சாயரட்சை பூஜை நடந்து கொண்டிருந்தது,ஆதிகேசவ பெருமாளின் தரிசனம் பெற சற்று காத்திருக்க வேண்டும்.🎝திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்🎝 என்று சிறு குழந்தை பாடிக்கொண்டிருந்தாள். (வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து) என்னப்பா ராமகிருஷ்ணா!,ஆதி கேசவரை தரிசிக்க வந்தாயா? அடடே விருபாக்ஷர் (நம் விருபாக்ஷர்),குசலம் விசாரித்து,நாங்கள் மூவரும் தரிசிக்க காத்துக்கொண்டிருந்தோம். சன்னதி வாயிலில் "சர்வ தேவ நமஸ்கார ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி" என்று எழுதியிருந்தது. விருபாக்ஷர் இதன் பொருளை எடுத்துரைத்தார்,நாம் வேவ்வேறு இறைவனுக்கு செய்யும் வழிபாடு அத்தனையும் கேசவனையே சென்றடைகிறது என்று சொன்னார்.(வானிலிருந்து பொழியும் மழையானது வேவ்வேறு நீர்நிலைகளில் சென்று இறுதியில் கடலை சென்றடைகிறது) அற்புதம் என்று ரசிக்க,திரை விலகி ஆதிகேசவரின் தரிசனம் கிடைத்தது. (அறியாமை மற...