ஊற்று எழுதுகோல்

ஊற்று எழுதுகோல்


இது புதிய சொல் அல்ல,ஆங்கிலத்தில் இங்க்பேனா (inkpen) என்று அழைக்கப்படும் எழுதுகோல் தான் அது.


சிறுவயதில் பள்ளிக்கு செல்லும் பொது சில விஷயங்கள் "நானும் வளர்ந்து விட்டேன்" என்று நம்மை நாமே தட்டிக் கொள்ள சில சரிபார்ப்பு பட்டியல் ஒன்று இருக்கும் 

உதாரணமாக அரைக்கால் சட்டையிலிருந்து முழுக்கால் சட்டைக்கு பள்ளி சீருடை மாறுவது,தரை தளத்தில் இருந்து முதல் தளம் அல்லது இரண்டாம் தளத்திற்கு வகுப்பறை அமைவது என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

இவை சிறு விஷயமாக தோன்றும்,தோன்றலாம் ஆனால் அப்போது நம்மை பற்றி நாமே பெருமைப் பட நினைத்துக்கொள்வதற்கு இருந்த சில விஷயங்கள் இவை.

ஒரு நிமிடம் மேலே ஏதோ சொல்ல விட்டுவிட்டேனா?

இல்லை விட்டுவிடவில்லை 

இதோ: சிலேட்டு குச்சியில் இருந்து நோட்டு புத்தகம் பென்சிலிற்கு மாறியது.

பென்சிலிருந்து பேனாவிற்கு மாறியது.






அன்றைய வகுப்பில் அனைவரது பேச்சும் எழுதுகோலை பற்றிதான்.

எழுதுகோல் பொருட்காட்சியே நடத்திவிடலாம் அவ்வளவு ரகங்கள்,தகவல்கள்.

அந்த பேனாவில் முதல் முறையாக எழுதும்போதும் ஒரு பெருமிதம்.அதை நினைத்தால் இன்றும் சிலிர்க்கிறது.

பேனாவின் ரகங்களும் வடிவமைப்பும் மாறுபடும் ஆனால் அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய பேனா,"ஹீரோ (Hero) பேனா" 

என்னதான் ஹீரோவாக இருந்தாலும்,நாங்கள் திரைக்கதை (வினாக்கு ஏற்ற விடை தெரியாத பொது தேர்வில் கதை,கவிதை எல்லாம் வரும்) எழுத,அதாவது தேர்வுக்கு அதை பயன்படுத்துவதில்லை.(இங்க் கொள்ளளவு மிகவும் குறைவு)

அந்த பேனா எத்தனையோ பேரின் கையிலும்,சட்டைப்பையிலும் கறைப்படிய செய்தாலும்,வாழ்வில் நல்ல நிலையில் கரை சேர்க்கத் தவறியதில்லை.

இன்று  எழுதுகோல் எவ்வளவோ வளர்ச்சி அடைந்தாலும்,மனம் பழைய ஊற்று எழுதுகோலை தேடுகிறது.

அலுவலகத்தில் விசைப்பலகையில் தட்டச்சு செய்தாலும்,இரவில் இதுபோன்று வலைபதிவை ஊற்று எழுதுகோலை கொண்டு எழுதும்போது,மீண்டும் ஒரு இன்பம்.

சுஜாதா தேசிகன் என்ற எழுத்தாளரின் "இங்க் பேனா" என்ற கட்டுரையை படித்தேன்.

இங்க்பேனாவில் எழுதும் பழக்கத்தை மறு அமல் படுத்தினேன்.

(அலைபேசி,பணப்பையுடன் அன்றாடம் என்னுடன் பயணம் செய்கிறது இங்க்பேன்)

இங்க்பேனாவில் எழுதுவது சுகம் தான்.


அப்படி என்ன இருக்கிறது?

இங்க் பேனா வாங்கி எழுதுங்கள்,புரியும்.

                        எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
                        கண்ணென்ப வாழும் உயிர்க்கு.


நன்றி 
பா ராமகிருஷ்ணன் 
19-02-2025 

Comments

  1. A good childhood memory for me also

    ReplyDelete
  2. அருமை.. Hilarious.. 😂..
    நல்ல வெள்ளை சட்டையில் "பின்" விளைவுகளுக்கும் பயன்படுமே!!

    நல்ல வரிகள்..தொடர்ந்து எழுதுங்கள்..
    Gen X Gen Yகளுக்கு தெரியாமல் இருக்கலாம்.. பென் பால் என்றதொரு தொடர்நட்புவளையங்களும் இருந்தன Pen-pals..

    501 பார் சோப்பை மரையில் தடவி பேனா ஒழுகுதலை தடுத்து நிறுத்தினால் டாக்டர் பட்டம் பெற்ற மிதப்பு வரும்!!

    அது ஒரு (பே) கனாக்காலம்..!

    ReplyDelete
  3. This blog made me rewind my school days. I still have my hero pen. Thankyou.

    ReplyDelete
  4. It was wonderful blog .I got my past memories of school.Very thank ful to you for recreating memories .

    ReplyDelete

Post a Comment

we invite your valuable comments