தமிழ் தாத்தா என்று நாம் அன்போடு போற்றும் மகாமகோபாத்தயாய உ.வே.சாமிநாதையர் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தமிழ் தாத்தாவும் கம்பராமாயணமும். மதிப்பிற்குரிய உ.வே.சா அவர்கள் அவருடைய ஆசிரியரான திரு.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் இருந்து கம்பராமாயணம் பாடம் கேட்டார் ஒரு தீபாவளி அன்று மாயூரம் (இன்றைய மாயவரம்) கடைவீதியில் ஓரிடத்தில் கம்பராமாயணம் ஏழு காண்டங்களும் ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் கம்பராமாயணம் பாடம் கேட்டு வந்தமையால்,அதுவரையில் இரவல் புத்தகங்களை படித்துவந்தமையாலும்.கம்பராமாயணப் புத்தகங்களை வாங்கிவிடவேண்டும் என்று அவருக்கு ஆவல் உண்டானது.ஆனால் அவரிடம் புத்தகத்தை வாங்குவதற்குப் போதிய பணமில்லை. அப்போதைய அப்புத்தகத்தின் விலை ஏழு ரூபாய் (ஒரு பைசா கூடக் குறைக்காத கடைக்காரர்).எப்படியாவது அதனை வாங்கிவிடவேண்டும் என்று உ.வே.சா அவர்களுக்கு ஆசை. உடனே விரைந்து திருவாவடுதுறை வந்து தன் சிறியத் தகப்பனாரிடம் விஷயத்தைச் சொல்லி பணம் கேட்டார்.அப்பொழுது தான் அவருக்கு சம்பளம் வந்து இருந்தது. சம்பளம் அதே "ஏழு ரூபாய்" விஷயத்தை அறிந்ததும்...