பொன் மாலைப்பொழுது
ஒரு இனிய மாலை வேளையில் மதுரைக்கு செல்ல முன்பதிவு செய்யப்பட்ட என் ரயில் இருக்கையில் அமர்ந்திருந்தேன்,நான் விரும்பி கேட்கும் வானொலி பண்பலையில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பாடலை ரசித்துக்கொண்டிருந்தேன்.
🎵வானம் எனக்கொரு போதி மரம்.
நாளும் எனக்கது சேதி தரும்.
ஒரு நாள் உலகம் நீதி பெறும்.
திருநாள் நிகழும் தேதி வரும்.
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்..... 🎵
ஆஹா! அற்புதம் ரயில் பயணத்தில் "நீங்க நான் ராஜா சர் "(இது ரேடியோ மிர்ச்சி செந்தில் தொகுத்த வழங்கிய வானொலி நிகழ்ச்சியின் பெயர்),இன்று எனக்கேற்ற தலைப்பு -("நீங்கள்" வலைப்பூவின் வாசகர்கள்)
மேலும் தொடர்வோம்
என் முன் இருக்கையில் வந்து அமர்ந்தார் ஒரு நபர்,பரிச்சயமானவர்தான் விருபாக்ஷர்தான்,நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படி ஒரு தருணத்தில் சந்திப்பேன் என்று எதிர்ப்பார்க்கவில்லை!
(விருபாக்ஷர் யார் என்று அறியாதவர்கள் இந்த இணைப்பின் மூலம் இப்பதிவை படித்தபிறகு தெரிந்து கொள்ளுங்கள் Virupakshar).
விருபாக்ஷர் ஏதோ சிந்தனையில் இருப்பவர் போல் காணப்பட்டார்.
"விருபாக்ஷரே என்ன சிந்தனை"
"கொஞ்சம் பொறு ராம்கி"
பயணசீட்டு பரிசோதகர் எங்களுக்கு சற்று தொலைவில் இருந்த இருக்கையில் வந்தமர்ந்தார்.
விருபாக்ஷர் நொடிப்பொழுதில் அவர் அருகே சென்றார்.இருவருக்கும் இடையே உரையாடல், அவர்களை கவனித்துக்கொண்டே பாடலை ரசிக்க தொடங்கினேன்.
🎵நேற்றென் அரங்கிலே
நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே
நிஜங்களின் தரிசனம்
வருங்காலம், வசந்த காலம்
நாளும் மங்களம்🎵
விருபாக்ஷர் இருக்கையில் அமர்ந்தார்.
"பயணச்சீட்டு பரிசோதகர் நம் இருக்கைக்கு வருவாரே.நீங்க ஏன் போய்....."என்று முடிப்பதற்குள்.
"ராம்கி நான் முன்பதிவு செய்யும் பொழுது தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்துவிட்டேன்,ஆனால் நான் ரயிலெரியது எழும்பூரில்,, எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவற்ற பயன்சீட்டை பெற்று, பரிசோதகரிடம் தெரிவித்து சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டு வந்தேன்" என்றார்.
அவர் கூறியது கேட்ட அருகில் இருந்த நபர்," ஏன் சார் அவர் தாம்பரத்துக்கு அப்புறம்தான் சோதன பண்ணுவாரு இது தெரியாம நீங்க வேற"என்று கேலி செய்ய தொடங்கினார்.
விருபாக்ஷர் என்னை நோக்கி "ராம்கி நீ டேல் கார்னகி (Dale Carnegie) எழுதிய "How to win over friends and influence people" என்ற நூலை படித்தாயா என்றார்.
"எதோ கொஞ்சம்"
அதில் "If you wrong admit it" என்ற தலைப்பை படித்திருப்பாய் தானே?"
ஆம் என்று தலை அசைத்தேன்.
அந்த கதையை கூற சொன்னார்,கூறினேன்(இரு கதைகள் கதையை நீங்கள் புத்தகத்தில் படியுங்கள்)
கதையின் கரு இது தான்:- தவறு செய்தால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும்,அதனை சரி செய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அதனை மறைக்கவோ, நியாய படுத்தவோ கூடாது
செய்த தவறை மறைப்பது தவறினால் ஏற்படும் விளைவை அதிகப்படுத்திவிடும்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
அருகிலிருந்த மற்றொரு நபர் அய்யா இது போன்ற கரு "ஆண்டவன் கட்டளை" என்ற விஜய் சேதுபதி நடித்த படத்தில் உள்ளது என்று அந்த கதையை கூறினார்.
கதாநாயகன் வெளிநாடு சென்று பொருளீட்ட தவறான வழிகாட்டுதலின் அடிப்படையில் தவறான தகவல்களை (பொய்யும் மெய்யும் கலந்து)கொண்டு பாஸ்போர்ட் பெற்று விடுவான்,ஆனால் வெளிநாடு செல்ல முடியாமல் உள்ளூரிலேயே வேலை செய்து நன் மதிப்பைப்பெற்றார்.திடீரென்று ஒரு நாள் அவன் வேலை செய்யும் நிறுவனம் அவனை அயல் நாடு அழைத்து செல்ல பாஸ்போர்ட் கேட்டனர்.தவறான தகவல் உள்ள பாஸ்போர்ட் கொடுத்தால் தன் மதிப்பு பாதிக்கப்படும் என்பதரிந்து,மீண்டும் தவறான வழிகாட்டிகலாள் பொய்யை மெய்யாக்க முயற்சி செய்வார்.
விளைவு;மேலும் பல தவறுகள்.
இறுதியாக அதுவும் பயனற்று போகவே பாஸ்போர்ட் அலுவலக உயர் அதிகாரியை அணுகி செய்த தவறை ஒப்புக்கொண்டு சரி செய்ய வழி கேட்பான்,உயர் அதிகாரி அவனை கடிந்து கொண்டு,தவறான வழிகாட்டல்களை அனுகவேண்டாம் என அறிவுறைத்து திருத்தம் செய்யும் வழிமுறையை கூறுவார்.
(இது கதையின் ஒரு பகுதி - நமக்கு தேவையான பகுதி)
முதலில் கேலி செய்த நபரும் தன் வாழ்கையில் நடந்த நிகழ்வை அசைபோட்டு ஆமோதித்தார்.
நிறைவாக:
தவறிலிருந்து கற்றுக்கொள்வோம்,ஒப்புக்கொள்வோம்.
தவறுகள் செய்யாமல் இருக்க பழகிக்கொள்வோம்.
இப்படி நடந்த உரையாடலில் எனக்கு மேற்கூறிய பாடல்கள் மனதில் ஒலிக்க துவங்கின......
அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில்...
🎵சொர்கமே என்றாலும் அது நம் ஊர்
போல வருமா
எந்நாடு என்றாலும் நம் நாட்டிறகீ டாகுமா...🎵
விருபாக்ஷரிடம் இருந்து குறுஞ்செய்தி "ஶ்ரீரங்கநாதர் தரிசனம் பெறலாம் என்று நினைத்தேன் - ஶ்ரீ ரங்கத்தில் இறங்கிவிட்டேன் - அனைவரின் நலனுக்காக என் பிரார்த்தனை தொடரும்,பிறகு சந்திப்போம்.
டீ கடையில் 🎵ஸ்ரீரங்க ரங்க
நாதனின் பாதம் வந்தனம் ..🎵
ராமகிருஷ்ணன் பா
பங்குனி திங்கள் 8- ம் நாள்
21-மார்ச்-2024
அருமை...
ReplyDeleteSuperb👍
ReplyDelete