ஹாரிபாட்டரும் மந்திரக்கோலும்.

ஹாரி பாட்டர் ஜே.கே.ரௌலிங்  என்பவரால் எழுதப்பட்ட புதினம் ஆகும்.புதினத்தை கடந்து திரைப்படமாக பலருக்கு பரிச்சயமான ஒன்று.

ஹாகுவார்ட்ஸ் என்ற மாயாஜால பள்ளியில் பயிலும் மானவன் மற்றும் பள்ளியின் கதை.நான் சிறுவயதில் அந்த திரைப்படத்தை பார்த்து,ஹாரி பாட்டர் திரைப்படத்தில் வருவது போல வீட்டில் உள்ள துடைப்பான் குச்சியை (Broom stick or Mop stick) கொண்டு பறக்க முயன்ற முயற்சிகள் ஏராளம்.இறுதியில் பறந்தேன்.

பயப்பட வேண்டாம். 

என் கற்பனையில் பறந்தேன்.

இதுபோல் மாயாஜால பள்ளி உண்டா எங்கே இருக்கிறது? ,என்று ஏராளமான கேள்விகள்.

மந்திரக்கோல் வேண்டும் என்று,கடைகளில் கொடுக்கும் கட்டை பையில் உள்ள குச்சியை எடுத்து ஹாரி பாட்டர் போல் முயன்றேன்,முயன்று கொண்டே இருந்தேன்.

பிறகு ஞானோதயம் வந்தது அப்படி ஒரு பள்ளியே  இல்லை என்று, சிரித்தேன்.

சென்ற வாரம் சென்னையில் பெய்த மழையில் பல மரங்கள் சாய்ந்தன,மரங்களின் கிளைகள் முறிந்தன.அப்போது...
இந்த குச்சியை கண்டேன்.

ஹாரி பாட்டர் படத்தில் வரும் elderly wand என்று சொல்ல கூடிய மூத்த மந்திரக்கோல்.(எனக்குள் இருந்த அந்த சிறு வயது கற்பனை..வரலாமா வேண்டாமா என்பது போல எட்டிப்பார்த்தது).

இந்த குச்சியை வைத்து மாயாஜாலம் செய்ய முடியாது. ஆனால் எதோ ஒரு சந்தோஷம்.குழந்தையாக மாறி விட்டது போன்ற உணர்வு.

இந்த குச்சியிடம் மந்திர சக்தி இல்லை ஆனால் மருத்துவ சக்தி உள்ளது,elderly wand போல பழமையானது.

ஏனெனில் இது வேப்பமரத்தில் இருந்து கிடைத்த பொக்கிஷம்.

வேப்ப மரத்தின் பயன் அனைவரும் அறிந்ததே,இருந்தும் நான் பெற்ற பயன் மற்றும் அனுபவத்தின் பயனை  இங்கே கொடுக்கிறேன்.

மேலே புகைப்படத்தில் உள்ளது போல குச்சியை வைத்து பல் துலக்கலாம்.

நில வேம்பு குடிநீர்

வேப்பெண்ணய் கரைசல் - சிறந்த பூச்சி விரட்டி.






(இதை என் நண்பன் சொன்னான் என்று சொல்லாமல்,என் அனுபவத்தை நானே பகிர்கிறேன்😄)



ராமகிருஷ்ணன்.பா
14-December-2023






Comments

  1. MASTERPIECE Great connection.! Unexpected! 😍

    ReplyDelete

Post a Comment

we invite your valuable comments