தேஜாவு

தேஜாவு.


அப்படி என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியும் என யூகிக்கிரேன்.
தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு
 தேஜாவு என்பது பிரஞ்சு மொழியில் இதற்கு ஏற்கனவே நடந்தது என்பது அர்த்தம்.நாம் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் போது அது ஏற்கனவே நடந்தது போல் தோன்றும். இது இரண்டு வகை ஒன்று இடம் சார்ந்தது. மற்றொன்று நிகழ்வு சார்ந்தது.

சமீபத்தில் இதே பெயர் கொண்ட படம் ஒன்றை OTT வழியாக கண்டேன்.
உடனடியாக படம் பார்க்கவில்லை,
படத்தின் விளக்கவுரை மற்றும் முன்னோட்டத்தை பார்த்தேன்.
முன்னோட்டம் படத்தின் மீது ஆர்வத்தை தூண்டியது.

ஆனால் படத்தை பார்க்கும் முன்னரே எனக்கும் தேஜாவு வந்துவிட்டது

ஆம்,இதே போல் ஒரு கதை எங்கோ கேட்டது போலோ அல்லது படித்தது போலோ இருந்தது.

அமைதியாக சிந்திக்க தொடங்கினேன்.அன்னை சரஸ்வதி காப்பாற்றினார்.

மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்

பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே 


(சகலகலாவல்லி மாலை - குமரகுருபர சுவாமிகள் அருளியது)

இது சரஸ்வதியின் சபதம் கதை போல் அல்லவா இருக்கிறது.

(🎵 இசை தமிழ் நீ செய்த அருள் சாதனை🎵என்று T M S அய்யா என் காதருகில் பாட தொடங்கினர் )

சரி விஷயத்திற்கு வருவோம்.எனக்கு வந்தது தேஜாவு இல்லை,ஞாபகம் (ஞானோதயம்)

ஆம் சமீபத்தில் திரு.சோ அய்யா அவர்கள் எழுதிய சரஸ்வதியின் சபதம் என்ற நாடக நூல் ஒன்றை படித்தேன் (புத்தகம் வாசகனை தேர்ந்தெடுத்ததது)

அந்த புத்தகத்தை படியுங்கள்.கதையின் சாராம்சம் இதுதான் அந்த கதையின் கதாநாயகன் ஒரு எழுத்தாளர்,அவர் எழுதிய கதையின் உள்ள கதாபாத்திரங்கள் எல்லாம் உயிர்பெற்று அவரை வந்து மிரட்டும்.இது எப்படி நடந்தது அந்த எழுத்தாளர் எப்படி எதிலிருந்து மீண்டார் முடிவு என்ன என்பதை சோ அவர்கள் மிகவும் நேர்த்தியாக எழுதியிருந்தார்.

கிட்டத்தட்ட "தேஜாவு" படத்தின் கதையும் இதுபோலவே இருப்பதாக எண்ணி படத்தை பார்த்தேன், கிட்டத்தட்ட கதை சரஸ்வதியின் சபதத்தில் படித்தது போலவே தொடங்கி எதிர்பாரா  திருப்பத்துடன் முடிந்தது.

"சரஸ்வதியின் சபதமும்" "தேஜாவு" வும் நன்றாக இருந்தது.

மொத்தத்தில் விவேக் ஒரு திரைபடத்தில் (Subconscious Memory power-காமெடியில் வருவதுபோன்று - 😊வாஷிங்டன் வெற்றிவேலும்,சிகாகோ சக்திவேலும் கதைக்கு வந்தபோது எமோஷனல் ஏகாம்பரத்தின் நிலை எப்படியிருந்தது என்பதை உணரமுடிகிறது😆 ) 


-பதிவு நிறைவுற்றது-


(இரவு மணி பன்னிரெண்டு கதவை தட்டும் ஓசை, கதவை விட ஆதிக்க ஓசை கேட்டது என் இதயத்தில்,கதவை திறந்தேன்.

ஒரு நபர்-பரிச்சயமானவர் போன்ற உணர்வு

யார் நீங்கள்? யாரை சந்திக்கவேண்டும்?

இங்கே ராமகிருஷ்ணன் (எ)ராம்கி (எ) RK இருக்கிறானா ?

நீங்கள்?

என்னை வைத்து முதல் கதை எழுதினான்,அதன் பிறகு எழுதினான் (அதிகம் இல்லை) ஆனால் என்னை மறந்துவிட்டான்,அதன் பிறகு எத்தனையோ Content ஐ  சிந்தித்தான் எழுதவில்லை,அதான் நானே என்னவென்று கேட்கலாம் என்று வந்துவிட்டேன்

அது இருக்கட்டும் உங்கள் பெயர் ?

விருபாக்ஷன் 

(என் முதல் பதிவில்  என்னை வலைப்பூ எழுத்தாளனாக உருவாக்கிய கதாபாத்திரம்)

என் முதல் பதிவு ஆங்கிலத்தில் படிக்க


நன்றிகளுடன் 

ராமகிருஷ்ணன் பாலாஜி 

 




Comments

  1. Awesome Ramki, impressed with the last part of your post
    Keep rocking

    ReplyDelete
    Replies
    1. Thanks it will be even more happy if I could know the Name of the person Commenting

      Delete

Post a Comment

we invite your valuable comments