புத்தகம்
வலைப்பூவில் என்னடா எழுதுவது என்று தினரிகொண்டிருந்த எனக்கு புத்தகத்தை பற்றி எழுதலாமே என்று புத்தகம் (புது(த்)அகம்) கூறியது அகத்தின் பொருள் என்னவென்று அகராதியை கேட்டதில் அகம் என்றால் உள்ளம், மனம் என்று கூறியது அகராதி, சரி புத்தகத்தை பற்றி எழுதலாம் என்று புத்தகம் கூறியது என்று எழுதிவிட்டு அது என்ன புது(த்)அகம் என்று அடைப்புகுறியில் போட்டிருக்கிறாயே என்ற உங்களின் கேள்விகளை புது அகம் மூலம் புரிந்துகொண்டேன். புது(த்)அகம் என்று நான் எழுதியதற்கு காரணம் புத்தகத்தை படித்ததனால் தோன்றிய புது அகம் அதாவது புத்துணர்வுபெற்ற என் அகம் (உள்ளம்) கூறியது.ஒரு ஆங்கில பொன்மொழி ஒன்று "the key thing about the book is you lose yourself in the authors world" என்று கூறுகிறது. என்னுடைய முதல் தமிழ் பதிவை புத்தகத்தை கொண்டும் புதுஅக த்தைக்கொண்டும் எழுதலாம் என்று என் பதிவை தொடங்குகிறேன் (அப்போ இதுவரைக்கும் intro தான் கொடுத்தியா ) புத்தகம் கல்வெட்டுகள் ,ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதி என்று தொடங்கி அச்சு இயந்திரம் மூலம் அச்சிடப்பட்ட இன்று நாம் வாசிக்கும் புத்தகமாகவும்,இன்னும் சற்று ஒரு படி மேலே ...