Posts

Showing posts from February, 2025

அன்பே சிவம்- பகுதி-1

Image
அன்பே சிவம் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு    அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்" என்று சேக்கிழார் பெருமானுக்கு அடியெடுத்துக்கொடுத்த,தாயிற் சிறந்த தயவான தத்துவனைப் (ரை) பற்றிய,அடியேனின் சிறு த்தொடர்ப் பதிவு அன்பே சிவம்,  அன்புதான் சிவம் சிவம் தான் அன்பு. ஒரு மகாசிவராத்திரி திருநாள்,நான் பிறந்த கிராமத்து கோவிலுக்கு சென்றேன். எம்பெருமான் சிவபெருமானுக்கு அபிஷேகமும் ஆராதனையும் மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.(தனக்கான பூஜையை அவர் சிறப்பாக நடத்திக்கொண்டார் என்று தான் கூற வேண்டும்)   "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்ற  மாணிக்கவாசகரின் வாசகமும் அதுவன்றோ! என் ஊருக்கு செல்வோம் குறிப்பாக நடராஜர் சந்நிதிக்கு குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே (திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்) தில்லை ஆனந்த கூத்தனை (ஸ்ரீ நடராஜ மூர்த்தியை) பார்த்தாலோ ,அவரை ந...

ஊற்று எழுதுகோல்

Image
ஊற்று எழுதுகோல் இது புதிய சொல் அல்ல,ஆங்கிலத்தில் இங்க்பேனா (inkpen) என்று அழைக்கப்படும் எழுதுகோல் தான் அது. சிறுவயதில் பள்ளிக்கு செல்லும் பொது சில விஷயங்கள் "நானும் வளர்ந்து விட்டேன்" என்று நம்மை நாமே தட்டிக் கொள்ள சில சரிபார்ப்பு பட்டியல் ஒன்று இருக்கும்  உதாரணமாக அரைக்கால் சட்டையிலிருந்து முழுக்கால் சட்டைக்கு பள்ளி சீருடை மாறுவது,தரை தளத்தில் இருந்து முதல் தளம் அல்லது இரண்டாம் தளத்திற்கு வகுப்பறை அமைவது என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இவை சிறு விஷயமாக தோன்றும்,தோன்றலாம் ஆனால் அப்போது நம்மை பற்றி நாமே பெருமைப் பட நினைத்துக்கொள்வதற்கு இருந்த சில விஷயங்கள் இவை. ஒரு நிமிடம் மேலே ஏதோ சொல்ல விட்டுவிட்டேனா? இல்லை விட்டுவிடவில்லை  இதோ: சிலேட்டு குச்சியில் இருந்து நோட்டு புத்தகம் பென்சிலிற்கு மாறியது. பென்சிலிருந்து பேனாவிற்கு மாறியது . அன்றைய வகுப்பில் அனைவரது பேச்சும் எழுதுகோலை பற்றிதான். எழுதுகோல் பொருட்காட்சியே நடத்திவிடலாம் அவ்வளவு ரகங்கள்,தகவல்கள். அந்த பேனாவில் முதல் முறையாக எழுதும்போதும் ஒரு பெருமிதம்.அதை நினைத்தால் இன்றும் சிலிர்க்கிறது. பேனாவின் ரகங்களும் வடிவமைப்ப...