பொன் மாலைப்பொழுது
ஒரு இனிய மாலை வேளையில் மதுரைக்கு செல்ல முன்பதிவு செய்யப்பட்ட என் ரயில் இருக்கையில் அமர்ந்திருந்தேன்,நான் விரும்பி கேட்கும் வானொலி பண்பலையில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பாடலை ரசித்துக்கொண்டிருந்தேன். 🎵வானம் எனக்கொரு போதி மரம். நாளும் எனக்கது சேதி தரும். ஒரு நாள் உலகம் நீதி பெறும். திருநாள் நிகழும் தேதி வரும். கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்..... 🎵 ஆஹா! அற்புதம் ரயில் பயணத்தில் "நீங்க நான் ராஜா சர் "(இது ரேடியோ மிர்ச்சி செந்தில் தொகுத்த வழங்கிய வானொலி நிகழ்ச்சியின் பெயர்),இன்று எனக்கேற்ற தலைப்பு -("நீங்கள்" வலைப்பூவின் வாசகர்கள்) மேலும் தொடர்வோம் என் முன் இருக்கையில் வந்து அமர்ந்தார் ஒரு நபர்,பரிச்சயமானவர்தான் விருபாக்ஷர்தான்,நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படி ஒரு தருணத்தில் சந்திப்பேன் என்று எதிர்ப்பார்க்கவில்லை! (விருபாக்ஷர் யார் என்று அறியாதவர்கள் இந்த இணைப்பின் மூலம் இப்பதிவை படித்தபிறகு தெரிந்து கொள்ளுங்கள் Virupakshar ). விருபாக்ஷர் ஏதோ சிந்தனையில் ...