Posts

Showing posts from June, 2023

தேஜாவு

தேஜாவு . அப்படி என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியும் என யூகிக்கிரேன். தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு  தேஜாவு என்பது பிரஞ்சு மொழியில் இதற்கு ஏற்கனவே நடந்தது என்பது அர்த்தம்.நாம் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் போது அது ஏற்கனவே நடந்தது போல் தோன்றும். இது இரண்டு வகை ஒன்று இடம் சார்ந்தது. மற்றொன்று நிகழ்வு சார்ந்தது. சமீபத்தில் இதே பெயர் கொண்ட படம் ஒன்றை OTT வழியாக கண்டேன். உடனடியாக படம் பார்க்கவில்லை, படத்தின் விளக்கவுரை மற்றும் முன்னோட்டத்தை பார்த்தேன். முன்னோட்டம் படத்தின் மீது ஆர்வத்தை தூண்டியது. ஆனால் படத்தை பார்க்கும் முன்னரே எனக்கும் தேஜாவு வந்துவிட்டது ஆம்,இதே போல் ஒரு கதை எங்கோ கேட்டது போலோ அல்லது படித்தது போலோ இருந்தது. அமைதியாக சிந்திக்க தொடங்கினேன்.அன்னை சரஸ்வதி காப்பாற்றினார். மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என் பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே   (சகலகலாவல்லி மாலை - குமரகுருபர சுவாமிகள் அருளியது) இது சரஸ்வதியின் சபதம் கதை போல் அல்லவா இருக்கிறது....